அடை மழை என்னை வாட்ட ...
உன்னை காண கண்கள் ஓட...
மனம் பதைக்க...
இதயம் தவிக்க...
உதடு வெடிக்க...
உனக்காக காத்திருத்தல்
பிடித்தது...!
மெல்லிய பாதம் எடுத்து
மேகமாய் நீரில் நடந்து வர..
மின்னலை வீட அவள் சருமம்
ஒளிர வந்தாய்
என்னை வென்றாய்...!
கண்ட விழி மூடாமல்
உன்னை காண..
என் மேல் விழுந்த மழை துளி போல்
உன் பார்வை பட...
என் ஸ்பரிசம் வியர்க்க,
வியர்வை துளியோ உடல் வெப்பத்தில்
கொதித்தது ஏனோ...
மழையின் காதலியோ நீ..!
மங்கை விழி அசைவில் மேகம் நகர...
மெல்லிய காற்றுடன்
இதயம் இடம் மாறியதை
உணர்ந்தேன்...
உன்னுடன் விழியில் பரிமாறினேன்
என் காதலை...!