கண்கள் மயங்கின அவளால், பதிந்தன அவள் மேல், பிரிக்கமுடியாமல் நான்....
பட்டு நூலை பற்களால் வெட்ட இயலுமா....
எனது இளமை வயதும் சிறிது போனது...
ஆனால் மனதில் மறையவில்லை....
மன எழுச்சி என் இதயத்துடிப்பை ஏற்றியது....
முகஉணர்ச்சிகள் என்னமோ புதிதாய் தோன்ற....
தனியாய் படுக்க நடுங்கினேன்....
என் இதயம் இன்னும் குழந்தையே....
அது இன்னும் வளர்சியற்றதே....
உன்னை கண்டத்தில் இருந்து....
யார் அறிவார்கள் உன் அருகில் உள்ள என் இதயம் குழந்தை என்று....
என்னை போன்றே அதையும் புனிதமாய் நினைத்தேன்....
ஆனால், என்னை வருத்தி துடிக்கின்றதே....
உனது பெயருக்கே மகிழ்கின்றதே....
எனது இதயத்தின் குரும்பை போல் யாருக்கும் இல்லை....
அணைபோட வேண்டும் அதற்கு தடைபோட வேண்டும்....
உன்னை எளிதாய் காதல் என்று ஏமாற்றிவிடுவாள் என்று....
இதயம் காதலில் விழ இதமாய் நடுங்குகிறது....
என் இதயம் என்றும் குழந்தையே....
அது இன்னும் வளர்சியற்றதே....
உன்னை கண்டத்தில் இருந்து....
துயர மேகம் இதயத்தை போர்த்த....
நடிப்புக்காக சிரிக்க பயந்தேன்....
வாழ்கையில் பாதி உணர்ச்சியை உணரவைக்க முடியவில்லை....
ஆனால், இவளால் இன்றோ காதலை சந்திக்கின்றேன்....
இதயத்துடிப்பு அதை உணர்த்த....
என் அருகில் வந்து என்னை பார்க்காமல் போனால்....
காதல் எனும் கத்தி இதயத்தில் சொருக....
இத்தருணங்கள் மறையாதோ மனதில்....
நகர்த்த முடியவில்லை கண்களை, இதயத்தை, உயிரை அவளிடம் இருந்து
ஆனால், வெளிப்படுத்த வீரம் இல்லை அவளிடம் மட்டும்.
என் இதயம் என்றும் குழந்தையே....
அது இன்னும் வளர்சியற்றதே....
உன்னை கண்டத்தில் இருந்து....