Wednesday, December 3, 2014

உன்னில் இருந்து வெளிவர எண்ணம் இல்லை



நான் தனிமையில் கடத்துகிறேன் 
காரிர்ருளை

நீ என்னை விட்டு சென்ற கதவுஓரத்தில்
உன்னில் கண்டேன் பெரும் கடலை
அது உயர்ந்து கொண்டிருந்தது
அது நிலை இல்லாமல் இருந்தது
ஆகையால் தவறாய் அணுகினேன்

உன்னுடன் இருந்த இரவுகள்
அனைத்தும் இருளும் சொர்க்கமாய்

உன்னில் இருந்து வெளிவர எண்ணம் இல்லை
நீ எனக்கு தேவையில்லை
ஆனால் எனது ஏக்கம் என்னுடன் மறையட்டும்

உன்னில் இருந்து வெளிவர எண்ணம் இல்லை 
ஆனால் உனக்கு தெரிவிக்குறேன் 
எனது வாழ்க்கை நீ இல்லையென்றால் என்ன என்று 

நான் மாறினேன் கடல் பாறையில் இருந்து 
நொறுங்கும் கண்ணாடியாய்
எனது இருள் குணத்தை வெளிக்கொண்டு வந்தாய் 

இங்கே கூறியது 
உண்மையே
உன்னில் இருந்து 
வெளிபடுத்தவேண்டும் என்னை

உன்னது பிரிவில் வாடுகிறேன்
ஆனால் எனது மூச்சை நிறுத்தி

காதலில் விழுந்த எனக்கு 
விடுதலை உண்டா???

உன்னில் இருந்து வெளிவர எண்ணம் இல்லை 
நீ எனக்கு தேவையில்லை ...!!!

Friday, June 6, 2014

கவி அல்ல இவை - மன ஓசை: கனவே கலையாதே

கவி அல்ல இவை - மன ஓசை: கனவே கலையாதே

கனவே கலையாதே


கனவிலே  விழிக்கிறேன் 
என் அருகில் உன்னை கண்டேன் 

எனது இதழ் ஓரத்தில் புன்னகை உடன் 
உனது அருகில் படுத்துக்கொண்டேன் 

தவிக்கிறேன் உள்ளே 
தவிப்பது உன்னால் 
மனம் தாவி தாவி குதிக்குதே 

அவள் விழிகளின் திரை விலக 
என் இதயம் வேகமாய் துடிக்க 
நரம்புகள் பின்னி 
உடல் அசையாமல் 
உயிர் பிரியும் தருவாயில் 

செவ்இதழ்கள் விரித்து 
முக்கை உரசி 
வாயோடு வாய் வைத்து 
மீண்டும் உயிர் கொடுத்தாள்...!

Sunday, March 23, 2014

நீ இன்றி வாழ முடியாது



கண்கள் சுற்றி தேடியது 
என் ஜீவன் 
என் சுவாசம் 
என் உயிர் 
என் காதலை 

ஒரு நொடிப்பொழுதில் 
என் வாழ்க்கை 
உனது கண்ணில் சமர்ப்பித்து
இதயங்கள் ஓட்ட அரவனைப்பேன்

எனது அமைதி 
எனது வலி நீயே 
வாழ்வேன் எல்லா நாளும் உன்னக்காக
வாழ்க்கை முழுதும் உன்னக்காக
ஒரு நொடியும் நீ இன்றி இல்லை
எனது மூச்சு உனது பெயரை  சுவாசிக்கும் 

நீயே தான் வாழ்வு
என் வாழ்க்கை
நீ இன்றி வாழ்வு இல்லை
நீ இல்லாமல் இருந்து என்ன உள்ளது
உன்னில் இருந்து பிரிவது என்னில் நானே பிரிவது 

Tuesday, August 27, 2013

எனக்கு காதல் எப்படி?


காதல் கனவுகள் ஆயிரம் 
ஆனால் சுவடுகள் அறியேன் 

உந்தன் நினைவுகள் நெஞ்சில் 
கடல் அலைபோல் வர 

நித்தம் துறந்தேன் நித்திரை 
ஆனால் உயிர் அணைந்தது 

மாசற்று மரமாய் போனேன் 
மனதை அறுத்து சென்றதால் 

வீசும் காற்றுக்கு தெரியுமா 
வாசம் இதமா கனமா என்று 

என் அழகிய காதலை 
மறக்கடித்தாய் 

என் குழந்தை காதலை 
கருவருத்தாய் 

பெண்கள் வேஷம் போதுமே 
ஆண்கள் சுவாசிக்க வேண்டுமே 

காதல் என்னும் போதை 
​​
அறிந்து 
புரிந்து 
தெரிந்து 
பழகி வருவது அல்ல 

காதல் ஒரு மாயை 
உணர்ந்து 
இன்புற்று 
துன்புற்று 
இழந்து 
பெற்று 
அனுபவித்து பெரும் சொர்க்கம்..!

Monday, April 22, 2013

வீரம் வருமா ???


கண்கள் மயங்கின அவளால், பதிந்தன  அவள் மேல், பிரிக்கமுடியாமல் நான்....
பட்டு நூலை பற்களால் வெட்ட இயலுமா....

எனது இளமை வயதும் சிறிது போனது...

ஆனால் மனதில் மறையவில்லை....

மன எழுச்சி என்  இதயத்துடிப்பை ஏற்றியது.... 
முகஉணர்ச்சிகள் என்னமோ புதிதாய் தோன்ற....
தனியாய் படுக்க நடுங்கினேன்....
என் இதயம் இன்னும் குழந்தையே.... 
அது இன்னும் வளர்சியற்றதே.... 
உன்னை கண்டத்தில் இருந்து....

யார் அறிவார்கள் உன் அருகில் உள்ள என் இதயம் குழந்தை என்று.... 
என்னை போன்றே அதையும் புனிதமாய் நினைத்தேன்.... 
ஆனால், என்னை வருத்தி துடிக்கின்றதே.... 
உனது பெயருக்கே மகிழ்கின்றதே.... 
எனது இதயத்தின் குரும்பை போல் யாருக்கும் இல்லை.... 
அணைபோட வேண்டும் அதற்கு தடைபோட வேண்டும்.... 
உன்னை எளிதாய் காதல் என்று ஏமாற்றிவிடுவாள் என்று.... 
இதயம் காதலில் விழ இதமாய் நடுங்குகிறது....
 
என் இதயம் என்றும் குழந்தையே....  
அது இன்னும் வளர்சியற்றதே.... 
உன்னை கண்டத்தில் இருந்து.... 

துயர மேகம் இதயத்தை போர்த்த.... 
நடிப்புக்காக சிரிக்க பயந்தேன்.... 
வாழ்கையில் பாதி உணர்ச்சியை உணரவைக்க முடியவில்லை.... 
ஆனால், இவளால் இன்றோ காதலை சந்திக்கின்றேன்.... 
இதயத்துடிப்பு அதை உணர்த்த....
என் அருகில் வந்து என்னை பார்க்காமல் போனால்.... 
காதல் எனும் கத்தி இதயத்தில் சொருக.... 
இத்தருணங்கள் மறையாதோ மனதில்....
 
நகர்த்த முடியவில்லை கண்களை, இதயத்தை, உயிரை அவளிடம் இருந்து 
ஆனால், வெளிப்படுத்த வீரம் இல்லை  அவளிடம் மட்டும். 

என் இதயம் என்றும் குழந்தையே....  
அது இன்னும் வளர்சியற்றதே.... 
உன்னை கண்டத்தில் இருந்து....  

Tuesday, December 11, 2012

இரவில் ஓர் அழகி



அழகிய இரவில் உன்னை கண்டேனே பெண்ணே 

என் ஆண்மை அனைத்தையும் உன் காலில் வைத்தேன் கண்ணே 

கடலில் நான் 
கரையில் நீ 
இருளில் நாம் 
நிலா ஒளியில் பகிர்ந்தோம் காதலை.....

கடல் அலை கண்டேன் உனது காலின் அடியில் பெண்ணே 

என் கண்கள் உனது தேக நூலகத்தை ஆராய்ந்தது கண்ணே 

கனவில் நான் 
அருகில் நீ 
கை கோர்த்தோம் நாம் 
நிலவிலும்  பகிர்ந்தோம் காதலை....

பெண்ணே உன்னை எனது இமை மூடாமல்
கண்களில் நிறுத்தி காதலிக்குறேன்.... 

பெண்ணே எனது இதயம் துடிக்காமல் 
உன்னை நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....

Monday, September 17, 2012

எனது இதயத்தில் பதிந்தாய்


அழகிய திமிரில் 
என்னை ஆட்கொள்ள வைத்த கண்கள் 

பழகிய நொடியில் 
காதலில் மொக்கி சாகடித்த அழகு 

என்னை அறியாமல் 
திமிறி வந்த எனது மோகம்

மெல்லிய இரவு இசையில் 
இரு இதயம் மட்டும் 

கண்ணிமை உலகத்தில் 
கருமையான கண்ணில்
நிலவே விழியில் 
சாட்சியாய் வைத்து

கடல்கரை மணலில் 
பிஞ்சு விரலில் 
நீ எழுதிய 
வார்த்தை 
என்னது பெயருக்கு 
அருகில் உன்னது பெயர் 

கடல் அலைகள்  
அளித்தாலும்
எனது இதயத்தில் 
பதிந்தாய்
ஆரா சுவடாய்..  

Saturday, August 18, 2012

யார் பெண்கள்???



கண்களில் கொடிய விஷமும் 
நெஞ்சில் கோடி கோடி வஞ்சமும் 
சேர்ந்து படைத்த சித்திரங்கள் 
சித்தர்களையே திக்காட செய்த 
ஷேத்திரங்கள் 
 
எண்ணத்தில் குரோதமும் 
காமத்தை ஆயுதமாய் கொண்ட 
சூற்பனகையின் வாரிசுகள்

பேதையை நம்பி 
பாதை மாற்றி
மாண்ட ஆண்வர்கங்கள் 
பல கோடி

என்றும் அடிமையாய்
என்றென்றும் காலடியில் 
சகடையில் திணித்து 
உலகாளும் அரக்கிகள் 

Wednesday, August 1, 2012

நிலவில் நான்...!





மனம் போல மெல்ல பறந்தேன்
ஒரு அடிக்கு நான்கு அடி நகர்ந்தேன்

அண்டத்தில் காற்று இல்லை
ஆனால் அடியேனுக்கு இதயம் துடிக்கவில்லை

வறண்ட உலகில்
தவழ்ந்தேன் மடகில்

இரண்டு கண்களில் நான் காண 
ஈராயிரம் கண்கள் என்னை காண 

முடிவில்லா முற்படுக்கையில் நான்
மெல்ல இடி மேல் அடி வைத்து நகர்ந்தேன் நான்

இவை நடந்தது 
வெள்ளி நிலவில்

என் அவளின் 
கடைக்கண் பார்வை பட்டதில் 

பேதையின் பார்வை
பாதை மாற்றியது

பூமி - நிலவு (Fast Track Point to Point Service)

Wednesday, July 4, 2012

நட்பு தொலையுமா...!


மனதில் ஒரு மழை காலமாய் இருந்தது 
உன்னது நட்பில் 

அதை முடித்துக்கொண்டது

அதிசயமாய் உள்ளது

காதலுக்கு முடிவு உள்ளது

நட்புக்கு முடிவு இல்லையாம்

மூடர்கல். 


மனம் இறுகிவிட்டது 

மனதார சிரித்து நாள் ஆகிவிட்டது  

மீண்டும் வாழ ஆசைப்படுகிறேன்

உன்னுடன் தோழா

என்றும் நட்புடன்..!

வாடா மச்சி..!

Thursday, June 21, 2012

அடைத்தாய் என்னை.. உன்னுள்..



கடவுளின் தரிசனம் அல்லவே
கருவிழி என்னை பார்க்க 
பெண்ணே உந்தன் 
பொல்லாத அழகு பாட
பூஆடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாட
தனிதமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமல் போனால் கூட்டில் 
நிற்குமோ எந்தன் ஆவி??

Sunday, June 3, 2012

மச்சி..!




இன்றும் நினைவில் உள்ளது 
உன்னை சந்தித்த நொடிகளை 

வெட்கம் பல
வார்த்தை சில

வேடிக்கையாய் உள்ளது 
இன்று நினைக்கையில்

நீ அருகில் இருக்கையில் 

இதயத்துடிப்பை தவறினாலும் 
இருப்பேன் உயிரோடு

என்றும் உனது
நினைவில் நண்பா...!

Tuesday, April 10, 2012

நீதானா…




நெஞ்ஜோடு உன்னை சேர்த்தேன் 
கவிதை படிக்க 
வார்த்தைகளின் மூலுபொருலும்
நீயானாய்…

கண்ணோடு உன்னை பார்த்தேன் 
மனதை கொள்ளைஅடித்து 
உயிர் என்னும் சித்திரமே 
நீதானா…

நீயே 
என் சுவாசமும் 
ஜீவனாய்
ஆனாயே ..

கன்னஅழகின் மோகங்களில் 
சரணடைய
சிநேகத்தின் காற்றாய் நீ 
சாய்த்தாயே…

மழையின் மொழியிலும் 
உன்முகமே 
கனவென்னும் உலகையே 
நீ ஆண்டாய்…

நெஞ்ஜோடு உன்னை சேர்த்தேன் 
கவிதை படிக்க 
வார்த்தைகளின் மூலுபொருலும்
நீயானாய்…

கண்ணோடு உன்னை பார்த்தேன் 
மனதை கொள்ளைஅடித்து 
உயிர் என்னும் சித்திரமே 
நீதானா…


Sunday, March 25, 2012

உனது காதல் எனது வாழ்கையில் கிடையாதா???


 

உணர்கிறேன் நெருப்பை 
எரியும் இதயத்தில் ....
ஒவ்வொரு நொடியும் உன்னைவிட்டு பிரிந்ததில் இருந்து...
நீ வேண்டும்
என்றும் என்னை சுற்றி...
ஒவ்வொரு நாளும் உன்னில் இருந்து நான் தொடங்க...


ர்கிறாயா எனது உணர்வுகளை...
எனது கண்களே உனக்கு காட்டுமே...
நினைப்பது யாவும் கிடைக்கையில் 
நீ மட்டும் இல்லாதது கொல்கிறதே...
உனது காதல் எனது வாழ்கையில் கிடையாதா???