Thursday, February 16, 2012

அழிவில்லாதது...





வானவில் நிறம் மாறிப்போன  மர்மம் என்ன...

மின்னலும் மழையாகி போன மர்மம் என்ன.....

என் உடல் மட்டும் என்னிடம்

எந்தன் உயிரெல்லாம் உன் சுவாசம் தானே...

ஜில் ஜில் ஜில் தென்றல் என்னை உரசிபோகும் போது 

என் இதயம் உன் பெயர் சொல்லி நிற்பது ஏனோ... 

என் நெஞ்சில் காதல் உன்னை சுற்றி என்றென்றும் வரும் 

உன்னது வயதென்னவோ நிறம் என்னவோ

என் காதல் அழிவில்லாதது...

Wednesday, February 8, 2012

அன்பே...!







உன்னை  கண்டதில்  கவிங்கனாய் மாறினேன் 
மெல்லிய  காற்றிலே  வானவில்  வரைகிறேன் 

என்மீது  தான் பனித்துளி  படருதே 
என்  இருதயம்  உன்  காலடியில் மறையுதே 

இமையேன நான் 
விழியேன நீ 
இருதயத்தில்
மனந்தோமே

நினைவேன நான் 
மனமென நீ 
காதலிலே 
கலந்தோமே

உன்னை பார்த்ததும் என்னை மறக்கிறேன் 
தண்ணீரிலே ஓவியமாய் கரைகிறேன் 
ஒரு பெண்மையின் நேசத்தை உணர்கிறேன் 
உன்னையும் கடவுளாய் தொழுகிறேன் 

அன்பே... அன்பே... அன்பே...

Saturday, February 4, 2012

காதலிப்பேன்...



நான் போகிறேன்...!

நான் இங்கு இருந்தால்
வருவேன் உன் வாழ்வில்
மறுபடியும்...

ஆனால்
நினைப்பேன் என் வாழ்வில்
எப்பொழுதும்...

என்றும் உன்னை காதலிப்பேன்...
எப்பொழுதும் உன்னை காதலிப்பேன்...

நமது கசப்பான காதல்
நினைவுகளே என் மனதில்...
எனது காதல் சவ ஊர்வலத்தில்
கொண்டு செல்கிறேன்...
நான் போகிறேன்...
நீ அழுவதற்காக அல்ல..
இருவருக்கும் தெரியும்
நான் உனக்கானவன் அல்ல என்று...

ஆனால்...
என்றும் காதலிப்பேன்...
எப்பொழுதும் காதலிப்பேன்...

உன் வாழ்க்கை பயணம்
இனிதாக...
நீ நினைத்தது கிடைக்க...
என்றும் ஆனந்தமாய்...
இருப்பாய்...

ஆனால்...
என்றும் காதலிப்பேன்...
எப்பொழுதும் காதலிப்பேன்...

அன்பே...
என்றும்.. எப்பொழுதும்...
காதலிப்பேன்.
..