Sunday, November 20, 2011
நீயே என் வாழ்கை...!
ஒரு நாள் தனிமையில்
நான் புதியவர்களில் தொலைந்திட
நம்ப யாரும் இல்லாமல் தவித்திட
தனியாய் தனிமையில் நான்
நீ வந்தாய் தூரத்தில்
மேகம் மெதுவாய் கழிந்திட
நீ துடைத்தாய் என் பயத்தை
ஒளி ஏற்றினாய் வாழ்வில்..
நீயே என் சூரியன்
என்னை பிரகாசிக்க வைத்தாய்
அல்ல நட்சத்திரமா
இரவில் மின்னிட
நீ என் நிலவு
என்றும் இதயத்தில் ஒளிர
நீயே என் உலகம்
என் வாழ்கையும்
நன்றி அம்மா....!
Tuesday, November 8, 2011
என்னுடன் வா...!
என்னுடன் வா இரவினிலே
என்னுடன் வா
உன்னக்கு எழுதுகிறேன் ஒரு கவிதை
ஓடிவிடலாம் பேருந்திலே
யாரும் தொடாத இடமாய்
பொய்களே இல்லாமல்
உன்னுடன் நடக்க வேண்டும்
அடைமேகம் சூழ
பனி காற்று வீச
மஞ்சள் வயலில்
நானும் நீயும்
மாலை நேரத்தில்
முயற்சிப்பாயா....!
என்னுடம் ஓடி வா
கை சேர்ந்து
இதல் சேர்போமா....!
மலை உச்சியில்
வந்துவிடு உயிரே
உன்னையே காதலிப்பேன் என்றும்
அன்பே
நாம் இருவரும்
ஒன்றாய் ஒன்று கூடி
மழையில் நனையவும்
புள் தரையில் அமரவும்
கடல் அலையில் நடக்கவும்
வாழ்கையை வாழவும்
வேண்டும் பெண்ணே நீ..
வந்துவிடு பெண்ணே என்னுடன்...!
Monday, October 31, 2011
விண்ணைத்தாண்டி வருவாயா..!
ஒவ்வொரு முறையும் காற்று தழுவ
உனது இனிய குரல் கேட்க
உன் பெயரை உதடுகள் உச்சரிக்கும்…..!
காலை பொழுதை பகலவன் எழுப்ப
கனவினில் கண்டதை மெல்ல உதித்திட
எனது காதலோ இருட்டில் கரைந்தது...!
நீ அருகில் உள்ளாய் எனில்
சொர்கத்திர்கே கொண்டாட்டமாம்
உன்னக்கு தெரியாது
எனது உள்ளத்தின் எண்ணங்கள்
பெண்ணே,
என்றும் தவறு ஆகாது
எனது மனதின் ஆசை
கூறுவேன் பெருமையுடன்
உனது காதோரம்
I Love You
நான் உன்னை காதலிக்கிறேன் என்று..!
உன்னிடம் கொண்ட காதல்
விண்ணை தொட்டு நிற்க
இவை என்றுமே
எப்பொழுதுமே காதலாய் இருக்க
விண்ணைத்தாண்டி வருவாயா..!
உனது காதலுக்காக காத்திருக்கும் அடிமை...!
உன்னை நினைக்காமல் இருக்க இயலாது...!
உன்னை நினைக்காமல் இருக்க இயலாது...!
Saturday, October 15, 2011
இல்லை என்ற முன்று எழுத்து...!
விழிகளில் பேசி
மனதினில் இணைந்து
உணர்வுகளில் பூக்கும்
பூந்தோட்டமாய் காதல்..!
அனால்..!
மனதினில் ஒன்றி
உணர்வுகளாய் மாறி
இதயத்தில் பிணைந்து
உணர்ந்து
பார்க்காமல்
எண்ணங்களில் மூழ்கி
இமையாய் துடித்து
இதயத்தில் நிறுத்தி
மூளையில் பதிந்து
காதலை உரைத்தப்போது..!
இல்லை என்றால்..!
பூந்தோட்டம் மாயம்
ஆனது அந்த முன்று எழுத்தில்..!
வருவான் உன்னக்காக...!
வராத தூக்கம்
இவள் விழியின் ஓரத்தில்
வருவான் இளவரசன்
உந்தன் மனதின் நடுவில்
வேங்கையாய் பாய்ந்து
உன் சிவந்த விரல் பிடித்து
தூக்கி செல்வான் ரதத்தில்
சொர்க்கத்தில் வாழ்வதற்கு..!
Thursday, October 6, 2011
காதல் என்று ஏமாற்றும் பெண்களே...!
நல்லவர்கள் யாரோ
தியவர்கள் யாரோ
கன்னியர்கள் யாவரும்
கயவர்கள் என்றே கூறுவேன்
கட்டுக்கு அடங்காத
காளைகளை கட்டி அணைக்கும்
வார்த்தைகளுடன்
நெஞ்சை தொட்டுவிட்டு
உயிரையும் மனதையும்
கட்டி தொங்கவிட்டு
எட்டி உதைக்கும் பேய்கள்...!
தியவர்கள் யாரோ
கன்னியர்கள் யாவரும்
கயவர்கள் என்றே கூறுவேன்
கட்டுக்கு அடங்காத
காளைகளை கட்டி அணைக்கும்
வார்த்தைகளுடன்
நெஞ்சை தொட்டுவிட்டு
உயிரையும் மனதையும்
கட்டி தொங்கவிட்டு
எட்டி உதைக்கும் பேய்கள்...!
Thursday, September 15, 2011
காதலை...!
அடை மழை என்னை வாட்ட ...
உன்னை காண கண்கள் ஓட...
மனம் பதைக்க...
இதயம் தவிக்க...
உதடு வெடிக்க...
உனக்காக காத்திருத்தல்
பிடித்தது...!
மெல்லிய பாதம் எடுத்து
மேகமாய் நீரில் நடந்து வர..
மின்னலை வீட அவள் சருமம்
ஒளிர வந்தாய்
என்னை வென்றாய்...!
கண்ட விழி மூடாமல்
உன்னை காண..
என் மேல் விழுந்த மழை துளி போல்
உன் பார்வை பட...
என் ஸ்பரிசம் வியர்க்க,
வியர்வை துளியோ உடல் வெப்பத்தில்
கொதித்தது ஏனோ...
மழையின் காதலியோ நீ..!
மங்கை விழி அசைவில் மேகம் நகர...
மெல்லிய காற்றுடன்
இதயம் இடம் மாறியதை
உணர்ந்தேன்...
உன்னுடன் விழியில் பரிமாறினேன்
என் காதலை...!
உன்னை காண கண்கள் ஓட...
மனம் பதைக்க...
இதயம் தவிக்க...
உதடு வெடிக்க...
உனக்காக காத்திருத்தல்
பிடித்தது...!
மெல்லிய பாதம் எடுத்து
மேகமாய் நீரில் நடந்து வர..
மின்னலை வீட அவள் சருமம்
ஒளிர வந்தாய்
என்னை வென்றாய்...!
கண்ட விழி மூடாமல்
உன்னை காண..
என் மேல் விழுந்த மழை துளி போல்
உன் பார்வை பட...
என் ஸ்பரிசம் வியர்க்க,
வியர்வை துளியோ உடல் வெப்பத்தில்
கொதித்தது ஏனோ...
மழையின் காதலியோ நீ..!
மங்கை விழி அசைவில் மேகம் நகர...
மெல்லிய காற்றுடன்
இதயம் இடம் மாறியதை
உணர்ந்தேன்...
உன்னுடன் விழியில் பரிமாறினேன்
என் காதலை...!
Friday, July 1, 2011
உன்னால் மட்டுமே...!
என் திறம்பட
என் எண்ணத்தில்
முழ்கினேன்...!
எங்கும் பச்சைக் காடுகள்
எதிலும் பசுமை இலைகள்
முழ்கினேன்...!
எந்தன் சருமங்கள்
எத்தனை விதவிதமாக
குளிர்ந்தணன்...!
என் செவிக் கேட்க
எத்தனை குயில்கள் அழகாய்
பேசினன்...!
என் கேசத்தை மரத் தாய்
எவ்வளவு அழகழகாய்
கோதிவிட...!
என் கண்களில்
எல்லாம் உப்பு வெள்ளம்
ஆறாய் ஓட...!
என் இன்பத்தை
அல்ல பேரின்பத்தை
கண்டேன்
இயற்கையால்
மட்டுமே...!
Saturday, June 18, 2011
உடையாதோ நெஞ்சம்...!
என் பார்வை
உன்னைக் கண்டப்பிறகு
தான் குருடன் ஆனேன்...!
என் பேச்சும்
உன்னைப் பற்றியே...!
என் வானம்
உன்னைத் தொட்டப்பிறகு
தான் விடிகின்றதே...!
என் நினைவும்
உன்னை சுற்றியே...!
பாவையே என்னை
நீ கொண்டுப்போ கொண்டுப்போ...!
என் காதலை
நீயும் தான் கொண்டுப்போ கொண்டுப்போ...!
ஏன் போகின்றாய்???
என்னை ஏற்கமாட்டாய???
நீ இல்லாமல்
உடையாதோ நெஞ்சம்...!
உன்னைக் கண்டப்பிறகு
தான் குருடன் ஆனேன்...!
என் பேச்சும்
உன்னைப் பற்றியே...!
என் வானம்
உன்னைத் தொட்டப்பிறகு
தான் விடிகின்றதே...!
என் நினைவும்
உன்னை சுற்றியே...!
பாவையே என்னை
நீ கொண்டுப்போ கொண்டுப்போ...!
என் காதலை
நீயும் தான் கொண்டுப்போ கொண்டுப்போ...!
ஏன் போகின்றாய்???
என்னை ஏற்கமாட்டாய???
நீ இல்லாமல்
உடையாதோ நெஞ்சம்...!
Wednesday, March 16, 2011
நண்பேன் டா...!
இல்லை என்று
இரு உதடுகளும்
கூறாது
உன்னை காணா
வரை கண்களும்
மூடாது
நித்தமும் உன்னை
நினைக்காமல் நொடிகள்
நகராது
நீ இல்லாமல்
வாழ்க்கை அர்த்தம்
பெறாது தோழா...!
நண்பேன் டா...!
- விக்னேஷ்
இரு உதடுகளும்
கூறாது
உன்னை காணா
வரை கண்களும்
மூடாது
நித்தமும் உன்னை
நினைக்காமல் நொடிகள்
நகராது
நீ இல்லாமல்
வாழ்க்கை அர்த்தம்
பெறாது தோழா...!
நண்பேன் டா...!
- விக்னேஷ்
Friday, March 11, 2011
அலையாய் மாற வரம் வேண்டும்
கண்டேன் அவளை
கடற்கரை அருகே
நின்றேன் ஒருகணம்
நித்தம் மறந்து
சென்றேன் அருகிலே
காற்றில் மிதந்து
வந்தனம் என்றேன்
வாய்மொழி மறந்து...!
கண்டால் என்னை
காணாமல் திரும்பி
சென்றால் தவழ்ந்து
தண்ணீர் விரும்பி
மெய்மறந்தேன் உன்
அலை விளையாட்டில்...!
கடல் அலையாய் மாறி
உன் பாதம் தொட
முடிவெடுத்தேன்
என்னை கடலுக்குள்
தொடுத்தேன்...!
ஆனால்
நிறுத்தினாய் என்னை
உன் விழியில்
நடத்தினாய் என்னை
உன் அருகில்
தொட்டாய் உன் விழியில்
என்னை
இதயத்தில்...!
தொடங்கினேன்
காதலிக்க உன்னை...!
- விக்னேஷ்
கடற்கரை அருகே
நின்றேன் ஒருகணம்
நித்தம் மறந்து
சென்றேன் அருகிலே
காற்றில் மிதந்து
வந்தனம் என்றேன்
வாய்மொழி மறந்து...!
கண்டால் என்னை
காணாமல் திரும்பி
சென்றால் தவழ்ந்து
தண்ணீர் விரும்பி
மெய்மறந்தேன் உன்
அலை விளையாட்டில்...!
கடல் அலையாய் மாறி
உன் பாதம் தொட
முடிவெடுத்தேன்
என்னை கடலுக்குள்
தொடுத்தேன்...!
ஆனால்
நிறுத்தினாய் என்னை
உன் விழியில்
நடத்தினாய் என்னை
உன் அருகில்
தொட்டாய் உன் விழியில்
என்னை
இதயத்தில்...!
தொடங்கினேன்
காதலிக்க உன்னை...!
- விக்னேஷ்
Wednesday, March 9, 2011
நான் பூ, நீ பட்டாம்புச்சி...!
என்ன நினைத்து அடி
உன்னிடம் மயங்கினேன்
காலடியில் இதயத்தை
உன்னிடம் சமர்பித்தேன்
காலையும் மாலையும்
உன்னிடம் போனதே
கண்ணை மூடி கனவிலும்
உன்னிடம் உறவாடினேன்
காதலில் வயப்பட்டேன்
உன்னிடம் அடிமையானேன்
கண்டப்படி நினைத்தேன்
உன்னிடம் இருந்து
கடைசியில் இல்லை
உன்னிடம் இதயம்..!
பட்டாம்புச்சி அடி நீ
ஒரு ஒரு பூவிடம்
தேன் உறிஞ்சும் விஷக்கிருமி அடி..!
ஆனால் வாடாமல் மீண்டும்
தேன் கொடுக்கும் அட்சயப்பூ அடி நான்..!
என்னென்றால் நான் காதலித்தேன் உன்னை..!
-விக்னேஷ்
உன்னிடம் மயங்கினேன்
காலடியில் இதயத்தை
உன்னிடம் சமர்பித்தேன்
காலையும் மாலையும்
உன்னிடம் போனதே
கண்ணை மூடி கனவிலும்
உன்னிடம் உறவாடினேன்
காதலில் வயப்பட்டேன்
உன்னிடம் அடிமையானேன்
கண்டப்படி நினைத்தேன்
உன்னிடம் இருந்து
கடைசியில் இல்லை
உன்னிடம் இதயம்..!
பட்டாம்புச்சி அடி நீ
ஒரு ஒரு பூவிடம்
தேன் உறிஞ்சும் விஷக்கிருமி அடி..!
ஆனால் வாடாமல் மீண்டும்
தேன் கொடுக்கும் அட்சயப்பூ அடி நான்..!
என்னென்றால் நான் காதலித்தேன் உன்னை..!
-விக்னேஷ்
Monday, January 17, 2011
என் சீதை வருவாளா?
கண் காணா தேசம்
குடிபோக!
கண்கலங்காமல்
காப்பாற்ற!
காத்திருந்தேன்
அவளுக்கு!
கையில்
பெட்டியுடன்!
ஓடிபோகலாமா???
என்ற சீதைக்கு!!!
குடிபோக!
கண்கலங்காமல்
காப்பாற்ற!
காத்திருந்தேன்
அவளுக்கு!
கையில்
பெட்டியுடன்!
ஓடிபோகலாமா???
என்ற சீதைக்கு!!!
- விக்னேஷ்
Monday, January 10, 2011
உன் பார்வையில்!
தேன் என்பது
உன் உதடாம்
என் வாடிய
உதட்டுக்கு மட்டும்
அது போல்
நானும் வெறும்
calcium கூடு தான்
உன் பார்வை படாத முட்டும்!!!
நீ இல்லாமல்??????????????
நித்தம் உன்னுடன்
பேச வேண்டும்
நில்லாமல் உன்னுடன்
வாழ வேண்டும்
நீண்ட உறவு
கொள்ள வேண்டும்
நீங்க சந்தோஷம்
நிலைக்க வேண்டும்
ஆனால்
நீ இல்லாமல்??????????????
Friday, January 7, 2011
காதல் முத்தம்
மரணத்தின் விளிம்பில் இருந்தேன் !
என்மனதின் விழில் நிறுத்தினேன்!
பார்த்து உணர்ந்ததை போல் இருந்தது
மரணம்!
மரணம்!
உன்னுடன் காதல் என்ற வலையில் விழுந்ததில்!
இயற்கையாய் சுற்றி கொண்டிருந்தவன்
செயற்கையாய் உன்னை சுற்றவைதாய்!
செயற்கையாய் உன்னை சுற்றவைதாய்!
கொண்டேன்
காதல்
காதல்
முடிவில்
கொன்றாய்
என்னை!
கொன்றாய்
என்னை!
சாவின் நொடியில் நான்!
காத்திருக்கிறேன்!
உன் கடைசி முத்ததிற்காக!
எல்லாம் உன்னாலே !
உன்னோடு நான் இருந்தேன்
முன்று நாட்கால்
வாழ்வின் முத்தான நாட்கள்
மயில் தோகையை கூந்தலாய் விரிய
மனம் தொங்கியது மரணதிர்ற்காக
ஆடியக் கூந்தலில்
அம்பாய் மை இட்ட விழியில்
ஜராவத அம்பு தொடுக்க
இதயம் சிதரியது உன் பாதத்தில்
பசும் பாலின் ஆடை போன்ற
பாதத்தில் உயிர் சாய்க்க
உடலை போர்த்தினாய் பொன்னால்
நெய்த பட்டு ஆடையில்
உயிர் கொடுத்தாய் உன் இரு வரி
செவ்விதல் முத்தத்தில்
விழித்தேன் உன் மடியில்
கட்டி அணைத்தேன்
காற்றோடு உன்னை
அனால் காற்றே புகாமல்
பதித்தாய் உன் உதட்டை
ஏன் உதட்டில் !
எல்லாம் உன்னாலே ! உன்னாலே !
முன்று நாட்கால்
வாழ்வின் முத்தான நாட்கள்
மயில் தோகையை கூந்தலாய் விரிய
மனம் தொங்கியது மரணதிர்ற்காக
ஆடியக் கூந்தலில்
அம்பாய் மை இட்ட விழியில்
ஜராவத அம்பு தொடுக்க
இதயம் சிதரியது உன் பாதத்தில்
பசும் பாலின் ஆடை போன்ற
பாதத்தில் உயிர் சாய்க்க
உடலை போர்த்தினாய் பொன்னால்
நெய்த பட்டு ஆடையில்
உயிர் கொடுத்தாய் உன் இரு வரி
செவ்விதல் முத்தத்தில்
விழித்தேன் உன் மடியில்
கட்டி அணைத்தேன்
காற்றோடு உன்னை
அனால் காற்றே புகாமல்
பதித்தாய் உன் உதட்டை
ஏன் உதட்டில் !
எல்லாம் உன்னாலே ! உன்னாலே !
Subscribe to:
Posts (Atom)






