அழகிய திமிரில்
என்னை ஆட்கொள்ள வைத்த கண்கள்
பழகிய நொடியில்
காதலில் மொக்கி சாகடித்த அழகு
என்னை அறியாமல்
திமிறி வந்த எனது மோகம்
மெல்லிய இரவு இசையில்
இரு இதயம் மட்டும்
கண்ணிமை உலகத்தில்
கருமையான கண்ணில்
நிலவே விழியில்
சாட்சியாய் வைத்து
கடல்கரை மணலில்
பிஞ்சு விரலில்
நீ எழுதிய
வார்த்தை
என்னது பெயருக்கு
அருகில் உன்னது பெயர்
கடல் அலைகள்
அளித்தாலும்
எனது இதயத்தில்
பதிந்தாய்
ஆரா சுவடாய்..

No comments:
Post a Comment