அழகிய இரவில் உன்னை கண்டேனே பெண்ணே
என் ஆண்மை அனைத்தையும் உன் காலில் வைத்தேன் கண்ணே
கடலில் நான்
கரையில் நீ
இருளில் நாம்
நிலா ஒளியில் பகிர்ந்தோம் காதலை.....
கடல் அலை கண்டேன் உனது காலின் அடியில் பெண்ணே
என் கண்கள் உனது தேக நூலகத்தை ஆராய்ந்தது கண்ணே
கனவில் நான்
அருகில் நீ
கை கோர்த்தோம் நாம்
நிலவிலும் பகிர்ந்தோம் காதலை....
பெண்ணே உன்னை எனது இமை மூடாமல்
கண்களில் நிறுத்தி காதலிக்குறேன்....
பெண்ணே எனது இதயம் துடிக்காமல்
உன்னை நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....











