Friday, March 11, 2011

அலையாய் மாற வரம் வேண்டும்

கண்டேன் அவளை
கடற்கரை அருகே

நின்றேன் ஒருகணம்
நித்தம் மறந்து

சென்றேன் அருகிலே
காற்றில் மிதந்து

வந்தனம் என்றேன்
வாய்மொழி மறந்து...!

கண்டால் என்னை
காணாமல் திரும்பி

சென்றால் தவழ்ந்து
தண்ணீர் விரும்பி

மெய்மறந்தேன் உன்
அலை விளையாட்டில்...!

கடல் அலையாய் மாறி

உன் பாதம் தொட
முடிவெடுத்தேன்

என்னை கடலுக்குள்
தொடுத்தேன்...!

ஆனால்
நிறுத்தினாய் என்னை
உன் விழியில்

நடத்தினாய் என்னை
உன் அருகில்

தொட்டாய் உன் விழியில்
என்னை
இதயத்தில்...!

தொடங்கினேன்
காதலிக்க உன்னை...!

- விக்னேஷ்

No comments:

Post a Comment